செவ்வாய், 4 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 அக்டோபர் 2025 (07:14 IST)

காந்தாரா -1 அலைக்கு நடுவிலும் தாக்குப் பிடிக்கும் தனுஷின் ‘இட்லி கடை’… இரண்டாம் நாள் வசூல் நிலவரம்!

காந்தாரா -1 அலைக்கு நடுவிலும் தாக்குப் பிடிக்கும் தனுஷின் ‘இட்லி கடை’… இரண்டாம் நாள் வசூல் நிலவரம்!
தனுஷ் இயக்கத்தில் உருவான நான்காவது படமாக ‘இட்லி கடை’ நேற்று முன்தினம் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  தனுஷுடன் பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றினார். படம் நேற்று ஆயுதபூஜை பண்டிகை நாளை முன்னிட்டு ரிலீஸானது.

குடும்ப செண்டிமெண்ட், இட்லி கடை எமோஷன், பள்ளிப் பருவ காதல், என சிம்பதி எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த துயர சம்பவம் மற்றும் அது சார்ந்த அரசியல் சர்ச்சைகளால் இந்த படத்துக்கு பெரியளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

முதல் நாளில் இந்திய அளவில் 11 கோடி ரூபாய் வசூலித்த இப்படம், இரண்டாம் நாள் நேற்று சுமார் 10 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளது. இரண்டு நாட்களும் விடுமுறை தினம் என்பதால் நல்ல வசூல் கிடைத்துள்ளது. இந்த வசூல் வார இறுதி நாட்களுக்குப் பிறகு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.