தக் லைஃப் படத்துக்கு நான் சொன்ன டைட்டில் ‘சம்பவாமி யுகே யுகே’.. கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!
நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.
படத்துக்காகக் கமல்ஹாசன் பல இடங்களுக்கு சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொள்கிறார். அதில் படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அப்படி ஒரு நேர்காணலில் “இந்த படத்துக்கு நான் முதலில் சொன்ன தலைப்பு சம்பவாமி யுகே யுகே. அப்படியென்றால் மீண்டும் மீண்டும் நான் அவதரிப்பேன் என்பதாகும். ஆனால் இந்த தலைப்பு யாருக்கும் புரியாது என்பதால் அதைக் கைவிட்டோம். இப்படிப் பல தலைப்புகளை சொல்லிக் கொண்டே வந்தேன். கடைசியில் தக் லைஃப் என சொன்ன போது மணிரத்னம் சம்மதம் தெரிவித்தார்” எனக் கூறியுள்ளார்.