திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (18:23 IST)

கமலின் 'தக்லைஃப்' படத்தில் இணைந்த பிரபல நடிகை

thuglife-Aishwarya Lekshmi
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் பிலிம்ஸ் இன்று 'தக்லைஃப்' படத்தில்   நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மாடல் அழகியாக தன் பயணத்தை தொடங்கிய இவர், கடந்த 2017 ஆம் ஆண்டும் நண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின்னர், மாயா நதி, வரதன், விஜய் சூப்பரும் பெளர்ணமியும், அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர் கடவு ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர், 2019 ஆம் ஆண்டு ஆக்சன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர், தனுஷுடன் இணைந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்களிலும், கட்டா குஸ்தி, கோத்தா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில், கமல்- மணிரத்னம் கூட்டணியில் ஏ.ஆர்-ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'தக்லைஃப்' என்ற படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில், இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் பிலிம்ஸ் இன்று 'தக்லைஃப்' படத்தில்   நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.