திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (18:24 IST)

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' பட புதிய அப்டேட் -எகிறும் எதிர்பார்ப்பு

george, gowtham karthik
கமலின் தக்லைஃப் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் படம் கமல் 234. இப்படத்திற்கு சமீபத்தில் 'தக் லைஃப்'  என்று சில வாரங்களுக்கு அறிவிக்கப்பட்டு, இப்படத்தின் ப்ரமோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலானது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடித்து வரும் நிலையில், இன்று இப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கமலின் தக்லைஃப் படத்தில்,  ஜோஜூ ஜார்ஜ், மற்றும் கெளதம் கார்த்திக் இருவரும் இணைந்துள்ளதாக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் படத்தின் ரிலீஸ் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.