1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (17:31 IST)

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

அஜித் நடித்த "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன்  மிகவும் ஆர்வமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், படத்தைப் பற்றி சில ஆச்சரிய தகவல்கள் வெளியாவதை நாம் தொடர்ந்து காண்கிறோம். தற்போது கிடைத்த தகவலின்படி, மம்முட்டி மற்றும் சிம்ரன் நடித்த "எதிரும் புதிரும்" என்ற படத்தில் இடம்பெற்ற "தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா" என்ற பிரபலமான பாடலை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த பாடலுக்காக அர்ஜுன் தாஸ் மற்றும் பிரியா வாரியர் நடனம் ஆடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில், இந்த பாடல் ஒரு பிரம்மாண்டமாக உருவாகி, ரசிகர்களுக்கு ஒரு இசை திருப்தியாக மாறும் எனவும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் ஆட்டம் போடுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
 
அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
 
Edited by Siva