திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (07:37 IST)

எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கிய ஃபைட் கிளப்!.. அதிகாரப்பூர்வ வசூல் விவரம்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலமாக உறியடி விஜய்குமாரின் 'ஃபைட் கிளப்' என்ற படத்தைக் கடந்த வாரம் வெளியிட்டார். இந்த படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்க, அவருடன் இணைந்து லோகேஷ் வெளியிட்டார். இந்த படத்தை லோகேஷின் உதவியாளர் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி கதை எழுத விஜய்குமார் வசனத்தை எழுதியிருந்தார்.

இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்னரே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு மோசமான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் இந்த படம் சோடை போகவில்லை. முதல் மூன்று நாட்களில் 5.75 கோடி ரூபாய் வசூலித்து கலக்கியுள்ளது.