திங்கள், 17 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 நவம்பர் 2025 (10:08 IST)

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
துல்கர் சல்மான் , பாக்யஸ்ரீ போர்ஸ் சமுத்திரக்கனி மற்றும் ராணா ஆகியோர் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள படம் ‘காந்தா’நேற்று ரிலீஸானது.  பேன் இஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.  படம் வெளியாகி பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க 1950களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் துல்கர் சல்மான், நடிப்பு சக்ரவர்த்தி டி கே மகாதேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பெரிய ஸ்டார் நடிகருக்கும், அவரை வளர்த்துவிட்ட இயக்குனருக்கும் இடையே நடக்கும் மோதலாக உருவாகியுள்ளது இந்த படம்.  பல இடங்களில் ஒளிப்பதிவு, கலை இயக்கம், நடிப்பு, வசனம் என அனைத்திலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது. ஆனாலும் இரண்டாம் பாதி செயற்கையான மேடை நாடகம் போல அமைந்தது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இதனால் படத்தின் வசூலும் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே உள்ளது. முதல் நாளில் சுமார் இந்திய அளவில்  4.35 கோடி ரூபாய் வசூலித்தது. இரண்டாம் நாளான சனிக்கிழமை 5 கோடி ரூபாயும் நேற்று மூன்றாம் நாளில் 4.35 கோடி ரூபாயும், வசூலித்து மொத்தமாக 13.22 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.