வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 ஜூன் 2021 (17:06 IST)

தனுஷின் ‘’ஜகமே தந்திரம்’’ படம் சாதனை!!!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் 16 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தனுஷின் இப்படம் உலக அளவில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற படம் ஏன நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், 12 நாடுகளில் நெட்பிளிக்ஸ் டாப் 10 பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில்,  ஜகமே தந்திரம் இடம் பிடித்துள்ளது. மேலும்,  இந்தியா, மலேசியா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இப்படம் முதலிடத்தில் உள்ளதாக நெட்பிளிஸ்க் தெரிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.