1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 7 ஜூலை 2025 (13:48 IST)

மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்ன ஒருவர் ராமர் வேடத்தில் நடிக்கலாமா?... ரன்பீர் கபூருக்கு எதிராகக் கிளம்பிய சர்ச்சை!

பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.  இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து யாஷ் சம்மந்தமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

முதல் பாகத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் ரன்பீர் கபூர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனக்குப் பிடித்த உணவு மாட்டிறைச்சி எனக் கூறியிருந்ததை இப்போது பகிரும் சிலர் “எப்படி மாட்டிறைச்சி சாப்பிடும் ஒருவர் ராமராக நடிக்கலாம்?” என விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு எதிர்த் தரப்பினர் “ஏன் நடித்தால் என்ன? ஒருவரின் உணவுப் பழக்கம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?” எதிர்க் கேள்வி வைத்துள்ளனர்.