1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜூன் 2025 (11:27 IST)

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?... பட்டியலில் மூன்று இளம் நடிகர்கள்!

ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் நோ டைம் டு டை டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்த படத்தோடு தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க போவதில்லை என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்டாக அடுத்து நடிக்கப் போவது மேட் மேக்ஸ் புகழ் டாம் ஹார்டி என சொல்லப்பட்டது. அவரைத் தவிர ரிச்சர்ட் மேடன் , மைக்கேல் ஃபாஸ்பெண்டர் , டேனியல் கலுயா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தது.

ஆனால் இவர்கள் தவிர இப்போது மூன்று இளம் நடிகர்கள்தான் இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் டாம் ஹாலண்ட், ஜேக்கப் எலோர்டி மற்றும் ஹாரிஸ் டிக்கின்சன் ஆகியோர்தான் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இவர்களை ஸ்டுடியோ தரப்பில் இருந்து சந்திக்கப் பேசவில்லை என சொல்லப்படுகிறது. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை டூன் படங்களின் இயக்குனர் டென்னிஸ் வில்லனுவே இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.