செவ்வாய், 25 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 நவம்பர் 2025 (08:15 IST)

புதிய இசை வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் அனிருத்.. முதல் படமாக ‘அரசன்’!

புதிய இசை வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் அனிருத்.. முதல் படமாக ‘அரசன்’!
தனுஷ் நடித்த ‘3’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். முதல் படத்தின் பாடல்களே உலகளவில் ஹிட்டடித்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத்.

இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது தமிழில் விஜய்யின் ஜனநாயகன், ரஜினியின் ‘ஜெயிலர் 2’ மற்றும் சிம்புவின் ‘அரசன்’ ஆகிய படங்களுக்கும் இந்தியில் ஷாருக் கானின் ‘கிங்’ படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.

34 வயதாகும் அனிருத் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராக வலம் வருகிறார். இந்நிலையில் அனிருத் விரைவில் தன்னுடைய இசை நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் நிறுவனத்தின் முதல் படமாக அவர் இசையமைக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.