திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (09:57 IST)

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்குனர் கிருஷ்ணா தயாரித்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் ருத்ரன் திரைப்படத்தின் பிரமோஷன் காக மதுரை செல்லூர் பகுதியில் இருக்கும் திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை பார்ப்பதற்காக படத்தின் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா வருகை தந்தனர்
 
ராகவா லாரன்ஸை பார்ப்பதற்காக பெண்கள் ரசிகர்கள் ஏராளமானோர் அவரை சூழ்ந்து கொண்டு வரவேற்றனர். பின்பு திரையரங்கியுள்ளே சென்று ரசிகர்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் உரையாற்றினார்..
 
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகவா லாரன்ஸ் திரைப்பட விமர்சனங்களை தனிப்பட்ட நபரை தாக்காமல், திரைப்படங்கள் பல கஷ்டப்பட்டு உருவாக்கப்படுகிறது.
நன்றாக வர வேண்டும் என்று தன் படம் எடுக்கிறார்கள் அதில் தவறு நடப்பது இயல்பு அது தப்பில்லை
 
பல்வேறு எதிர்மறை விமர்சனங்களையும் தாண்டி இந்த படம் மக்கள் மத்தியில் நன்றாக வரவேற்பு பெற்று இருக்கிறது. அதுதான் விமர்சனம் செய்பவர்களுக்கு நல்ல பதில் சந்திரமுகி 2 ஜிகர்தண்டா 2 நிறைவடைந்து விட்டது இனிமேல் இடைவெளி இல்லாமல் திரைப்படங்கள் வரிசையாக வரும்
 
சந்திரமுகி 2 விநாயகர் சதுர்த்தி என்று வெளிவரும் எதிர்காலத்தில் நடிக்கவும் இயக்கவும் திட்டமிட்டு உள்ளேன் கடவுளின் அருள் இருந்தால் விஜய் அஜித் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.