1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2025 (11:27 IST)

ஜிடி4 கார் ரேஸில் ஜெயித்தவுடன் அஜித் கூறிய மெசேஜ்.. ரசிகர்கள் உற்சாகம்..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித் குமார், தற்போது கார் ரேஸராகவும் சாதனை படைத்து வருகிறார். சமீபத்தில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
சில மாதங்களாக சினிமாவை ஓரமாக வைத்து, கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வந்த அஜித், பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜிடி4 ரேஸில் தனது அணியுடன் கலந்து கொண்டு 2-வது இடத்தை பிடித்து  சாதனையை நிகழ்த்தினார்.
 
இதுகுறித்து தனது நன்றியை தெரிவித்துள்ளஅஜித். "பயிற்சி ஆரம்பித்த நாள் முதல் இன்றைய வெற்றிவரை, உங்கள் ஆதரவில்லாமல் இது சாத்தியம் அல்ல. இதை நிகழ்த்த உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி," என்று அவர் கூறியுள்ளார்.
 
இதற்கு முன் துபாயிலும் இத்தாலியிலும் நடைபெற்ற போட்டிகளில், அஜித் தலைமையிலான கார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran