1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 21 ஏப்ரல் 2025 (07:08 IST)

ஏகே.. ஏகே.. ஏகே.. GT 4 ரேஸில் 2ம் இடம் பிடித்த அஜித்தை கொண்டாடிய அணியினர்..!

நடிகர் அஜித் தற்போது GT 4 கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் இரண்டாவது இடத்தை பிடித்ததை அடுத்து, அஜித் குமாரை அவரது அணியினர் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித், ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார் என்பதும், சர்வதேச அளவிலான கார் ரேஸ் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதும் தெரிந்தது.

ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேஸ் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில், அஜித் குமார் அணி மூன்றாவது இடம் பிடித்து, நாட்டிற்கே பெருமை தேடி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது அவர் பல சர்வதேச கார் ரேஸ் வீரர்கள் கலந்து கொள்ளும் GT 4 ஐரோப்பிய சீரிஸ் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் கூட அவர் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானது என்பதும், அவருக்கு எந்த காயமும் இல்லை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற GT 4 சீரிஸ் போட்டியில், அஜித் இரண்டாவது  இடத்தை பிடித்ததை அடுத்து, அவருக்கு அவர்கள் அணியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் "ஏ கே! ஏ கே!" என கோஷமிட்ட வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva