செவ்வாய், 30 செப்டம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2025 (15:01 IST)

ஹாரிஸ் ரவுஃப் ஒரு 'ரன் மெஷின்.. இதை நான் மட்டும் சொல்லவில்லை.. பாகிஸ்தானே சொல்கிறது: வாசிம் அக்ரம் கடும் தாக்கு!

ஹாரிஸ் ரவுஃப் ஒரு 'ரன் மெஷின்.. இதை நான் மட்டும் சொல்லவில்லை.. பாகிஸ்தானே சொல்கிறது: வாசிம் அக்ரம் கடும் தாக்கு!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு குறித்து அந்நாட்டின் முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப்பை கடுமையாக விமர்சித்த அவர், இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரவுஃப்பின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்ததால் அவரை "பந்துவீச்சாளர் என்ற முறையில் ஒரு ரன் மெஷின்" என்று சாடினார்.
 
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஒன்பதாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில், மீண்டும் ஒருமுறை இந்திய பேட்ஸ்மேன்களின் முக்கிய இலக்காக ஹாரிஸ் ரவுஃப் இருந்தார். அவர் 3.5 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். ரிங்கு சிங் அடித்த வெற்றியின் பவுண்டரியும் அவருடைய பந்தில் தான் வந்தன.
 
பாகிஸ்தான் தோல்வி குறித்து வாசிக் அக்ரம் கூறியபோது, "துரதிர்ஷ்டவசமாக,  ஹாரிஸ் ரவுஃப் ஒரு ரன் மெஷின் பந்துவீச்சாளர், குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக. நான் அவரை மட்டும் விமர்சிக்கவில்லை. ஒட்டுமொத்த நாடும் அவரை விமர்சித்து கொண்டிருக்கிறது.  அவர் முன்னேறப் போவதில்லை. குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து முதல் தர போட்டிகளையாவது அவர் விளையாட வேண்டும்" என்று அக்ரம் கூறினார்.
 
மேலும், டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாததால், ரவுஃப்பிடம் நெருக்கடியான சூழ்நிலைகளில் சிறப்பாகச் செயல்படும் மனப்பக்குவம் இல்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை அணியில் தொடர்ந்து வைப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.
 
Edited by Mahendran