செவ்வாய், 7 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Siva
Last Modified: வெள்ளி, 3 அக்டோபர் 2025 (17:48 IST)

கரூர் சம்பவம் எதிரொலி.. ஜனநாயகன் படத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம்..!

கரூர் சம்பவம் எதிரொலி.. ஜனநாயகன் படத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம்..!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின்  பொதுக்கூட்டத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம், தமிழக மக்களிடையே மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரையுலகிலும் ஒரு பெரிய அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான சூழ்நிலை காரணமாக, திரையுலகில் நடைபெறவிருந்த பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
அவற்றில் ஒன்று,  விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்தின் எதிர்வினை காரணமாக, வெளிநாட்டில் அந்த விழாவை நடத்துவது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
 
அதேபோல் அக்டோபர் முதல் வாரம் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருந்தது. அதுவும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
மொத்தத்தில், கரூர் சோகம் தமிழக அரசியல் களம் மட்டுமல்லாமல், திரையுலகிலும் பல்வேறு நிகழ்வுகளின் திட்டமிடலை பாதித்துள்ளது தெளிவாகிறது.
 
Edited by Siva