1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. surya viswantha and sons 25 days collection

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ.260 கோடியைத் தாண்டி வசூல் வேட்டை

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்  விஸ்வநாத் அண்ட் சன்ஸ் . குடும்பப் பின்னணியில் உருவான இத்திரைப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே  நடித்துள்ளனர்.
 
சமீபத்தில் மமிதா பைஜு நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட்  திரைப்படம் உலகளவில்  250 கோடி வசூலை எட்டி பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சூர்யாவுடன் அவர் இணைந்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ்  படமும் பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
 
கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்களின் அபார வரவேற்புடன், இப்படம் உலகளவில்  260 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  கருப்பு திரைப்படத்தை போல இப்படம்  300 கோடி கிளப்பில் இணையுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவிய போதிலும், தற்போது கிடைத்துள்ள  260 கோடி வசூலே தயாரிப்புத் தரப்பிற்கு மிகப்பெரிய லாபகரமாக அமைந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர் மெகா ஹிட் வசூலின் மூலம், இந்த ஆண்டு சூர்யா மற்றும் மமிதா பைஜு ஆகிய இருவருக்குமே திரையுலகில் அதிர்ஷ்டகரமான ஆண்டாக மாறியுள்ளது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 காமன்மேன் போட்டியாளர்கள் யார் யார்? தாக்கு பிடிப்பார்களா?