வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2024 (16:13 IST)

கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த பெண் விமான பயணி மரணம்.. என்ன காரணம்?

Flight
கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் இறந்து கிடந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில் ஒரு பயணி மட்டும் இருக்கையில் இருந்தார். இதையடுத்து விமான நிலைய பணியாளர்கள் அவர் தூங்கிவிட்டதாக நினைத்து அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் பதிலளிக்காமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக விமான பணியாளர்கள் மருத்துவர் குழுவுக்கு தகவல் தெரிவித்த நிலையில், மருத்துவர் குழுவினர் அந்த பெண்ணை பரிசோதனை செய்து இறந்துவிட்டார் என்றும், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவரைப் பற்றி விசாரித்த போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva