வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 12 டிசம்பர் 2024 (13:57 IST)

3 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. அதி கனமழை பெய்யும் என அறிவிப்பு..!

Rain
தமிழகத்தில் உள்ள மூன்று தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததோடு, ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று தென் மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சென்னை, கன்னியாகுமரி மற்றும் காவிரி படுகை மாவட்டங்களிலும் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழக முழுவதும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.  



Edied by Siva