1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (11:12 IST)

இருட்டுக்கடை யாருக்கு சொந்தமானது? குடும்பத்தில் எழுந்த பங்காளி தகராறு!?

Iruttukadai Halwa

பிரபலமான நெல்லை இருட்டுக்கடை அல்வா ஸ்தாபனத்தின் உரிமை யாருக்கு சொந்தம் என எழுந்துள்ள பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருநெல்வேலியில் உள்ள இருட்டுக்கடை அல்வா தேசிய அளவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. தற்போது இந்த இருட்டுக்கடையை கவிதா சிங் நடத்தி வருகிறார். சமீபத்தில் கவிதா சிங்கின் மகளுக்கு திருமணமான நிலையில் இருட்டுக்கடை உரிமையை அவர்கள் எழுதி கேட்டு மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக நயன் சிங் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருட்டுக்கடையின் உரிமையாளரான பிஜிலி சிங் எழுதிய உயிலின் படி, இருட்டுக்கடை தனக்குதான் சொந்தம் என கவிதா சிங்கின் சகோதரர் நயன் சிங் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

உலக பிரசித்து பெற்ற, திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இருட்டுக்கடை சமீபமாக அங்காளி, பங்காளி சொத்து தகராறில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K