1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 ஏப்ரல் 2025 (13:03 IST)

இருட்டுக்கடையை எழுதிக்கேட்டு கொலை மிரட்டல்! உரிமையாளர் மகள் வரதட்சணை கொடுமை புகார்!

Iruttukadai Halwa

திருநெல்வேலியில் உள்ள பிரபலமான இருட்டுக்கடையை எழுதிக் கேட்டு உரிமையாளரின் மகள் புகுந்த வீட்டில் டார்ச்சர் செய்வதாக புகார் அளித்துள்ளார்.

 

திருநெல்வேலி என்றாலே இருட்டுக்கடை அல்வாதான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். பல தசாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த இருட்டுக்கடை அல்வா கடையை கிருஷ்ணா சிங் என்பவர் 50 ஆண்டுகளுக்கும் முன்னதாக தொடங்கினார். அந்த கடையை அவரது மகன் ஹரி சிங் நடத்தி வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் அவர் தற்கொலை செய்துக் கொண்டார். தற்போது இருட்டுக்கடையை கவிதா சிங் நடத்தி வருகிறார். இவரது மகள் ஸ்ரீ கனிஷ்கா. சமீபத்தில் ஸ்ரீ கனிஷ்காவிற்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர் புகுந்த வீட்டில், இருட்டுக்கடையை தங்களுக்கு எழுதி தருமாறு தொல்லைக் கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.

 

திருமணமாகி 40 நாட்களிலேயே இதுகுறித்து ஸ்ரீகனிஷ்கா தற்போது நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி எழுதி தரும்படி, தனது கணவரும், அவரது குடும்பத்தாரும் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளதாக தகவல்.

 

பிரபலமான அல்வாக்கடையான இருட்டுக்கடையை கேட்டு வரதட்சணை கொடுமை நடந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K