வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 30 அக்டோபர் 2024 (16:39 IST)

விஜய் எழுப்பிய பாசிசம், பாயாசம் கேள்வி சரியானதே: ஜெயகுமார்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் மாநாட்டில், "அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா" என திமுகவை நோக்கி எழுப்பிய கேள்வி சரியானது தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா? என விஜய் அனுப்பிய கேள்வி சரியான ஒன்றுதான்; மத்திய அரசின் நடவடிக்கையைப் போலவே திமுக அரசின் நடவடிக்கையும் இருக்கிறது," என்று தெரிவித்தார்.

 புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் தான் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் ஜெயந்தி விழாவாக அறிவிக்கப்பட்டது என்றும், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சியில் தான் தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.

மேலும், "எம்ஜிஆர் ஒரு ஒப்பற்ற தலைவராக இருப்பதால்தான் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அவரது பெயரை உச்சரிக்கிறார்கள்," என்றும் எம்ஜிஆர் பெயரை விஜய் உச்சரித்தது குறித்து கூறியுள்ளார்.


Edited by Siva