வியாழன், 25 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 25 செப்டம்பர் 2025 (09:21 IST)

தமிழக அரசியல்வாதிகளில் முதல் இடத்தில் விஜய்.. அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின்! - எதில் தெரியுமா?

தமிழக அரசியல்வாதிகளில் முதல் இடத்தில் விஜய்.. அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின்! - எதில் தெரியுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நேரடி பிரச்சாரங்கள் மட்டுமல்லாமல் இந்த தேர்தலில் சமூக வலைதளம்தான் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏனென்றால் ஏராளமான இளைஞர்கள் தற்போது சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் நிலையில் தங்களுக்கு பிடித்த பிரபலங்களை, அவர்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பின் தொடர்கிறார்கள்.

 

அந்த வகையில் தற்போதைய தமிழக அரசியல்வாதிகளில் அதிகமான ஃபாலோவர்களை கொண்டவராக தவெக தலைவர் விஜய் உள்ளார். விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் 1.46 கோடி ஃபாலோவர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் 77 லட்சம், எக்ஸ் தளத்தில் 55 லட்சம் ஃபாலோவர்கள் உள்ளனர். இத்தனைக்கும் தனது அரசியல் வருகைக்கு சில நாட்கள் முன்னர்தான் அவர் சமூக வலைதளங்களில் கணக்கைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய்க்கு அடுத்தப்படியாக அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட அரசியல் தலைவர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அவரை இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பேரும், பேஸ்புக்கில் 31 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 40 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள்.

 

அவருக்கு அடுத்தப்படியாக அதிகமான ஃபாலோவர்களை கொண்டவராக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 15 லட்சம், பேஸ்புக்கில் 5.77 லட்சம், எக்ஸ் தளத்தில் 10 லட்சம் ஃபாலோவர்கள் உள்ளனர்.

 

அடுத்ததாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்ஸ்டாகிராமில் 98 ஆயிரம் பேர், பேஸ்புக்கில் 11 லட்சம் பேர், எக்ஸ் தளத்தில் 37 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். 

 

இதில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடைசியாக இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம் பேர், பேஸ்புக்கில் 1.68 லட்சம் பேர், எக்ஸ் தளத்தில் 6.55 லட்சம் பேரை ஃபாலோவர்களாக கொண்டுள்ளார்.

 

அதிகமான ஃபாலோவர்கள் கொண்டிருப்பது தேர்தலில் வாக்குகளாக மாறாது என்றாலும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ளவர்கள் தங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து அவர்களிடையே கொண்டு செல்ல முடியும் என்ற காரணி மட்டும் இதற்கு உதவியாக இருக்கும். ஆனால் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே சினிமா நடிகர் என்பதால் அவருக்கு அதிகமான ஃபாலோவர்கள் உள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். விஜய்யை விடவும் பல விளையாட்டு வீரர்கள் அதிகமான ஃபாலோவர்களை கொண்டிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறும் அவர்கள், ஃபாலோவர்கள் எண்ணிக்கை ஓட்டாக மாறாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K