பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உறுதிபடக் கூறிய போதிலும், பா.ஜ.க.வுக்கும் விஜய்க்கும் ஒரே நோக்கம் தான் என்றும், எங்கள் கூட்டணிக்கு விஜய் வர வாய்ப்புள்ளது என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை, குறிப்பாக கொள்கை எதிரி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் சொன்னதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், "தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது பா.ஜ.க.வுக்கும் விஜய்க்கும் இருக்கும் பொதுவான நோக்கம். அந்த ஒற்றுமையின் அடிப்படையில் கூட்டணி குறித்து பரிந்துரை செய்தேன். அந்தக் கூட்டணி குறித்து ஆலோசனை செய்தால் விஜய் நோக்கமும் எங்கள் நோக்கமும் நிறைவேறும்," என்று தெரிவித்தார்.
விஜய்யை இப்போது பா.ஜ.க.வின் 'பி டீம்' என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். "இதேபோல் தான் கமல்ஹாசனையும் கூறினார்கள், இப்போது கமல்ஹாசன் அ.தி.மு.க.வுடன் இணைந்துவிட்டார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி இணைந்தது தி.மு.க. தலைவர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran