1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay doing cycle comaign in kanniyakumari

திரளும் கூட்டம்!.. விஜயின் சைக்கிள் பிரச்சாரம் கை கொடுக்குமா?!..

vijay
தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. எனவே, வருகிற 21ம் தேதியோடு பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தினமும் பல தொகுதிகளுக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஒருபக்கம் புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்.. அதேநேரம் அவர் பிரச்சாரம் செய்வதை விட பிரச்சாரத்தை ரத்து செய்வதுதான் அதிகமாக இருக்கிறது..

அடிப்படையில் விஜய் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் அவரைக் காண பெரும் கூட்டம் கூடுகிறது. சாலையில் அவர் பிரசார வாகனத்தில் செல்லும்போதும் சரி, பொதுக்கூட்டங்களில் பேசும் போதும் சரி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் போது சரி.. அவரை பார்ப்பதற்காக பெருமளவு ரசிகர்கள் கூடி விடுகிறார்கள். இந்நிலையில்தான் இன்று அவர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரோட் ஷோ நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.

vijay

ஒருபக்கம் கடந்து சில நாட்களாகவே விஜய் சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்கிறார். அது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் காரைக்குடியில் சைக்கிளில் சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அதேபோல் இன்று கன்னியாகுமரியிலும் சைக்கிள் ஓட்டி வாக்குகள் சேகரித்தார் விஜய். விஜியின் சைக்கிள் பிரச்சாரம் அவருக்கு கை கொடுக்குமா என்பது தேர்தல் ரிசல்ட்டில் தெரிந்து விடும்.
அடுத்த கட்டுரையில்
பாஜகவை எதிர்த்தா இப்டிதான்!.. ஜனநாயகன் லீக் பண்ணதே அவங்கதான்!.. மாணிக்கம் தாகூர் பேட்டி..