வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2025 (16:09 IST)

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

தேமுதிக எந்த கூட்டணியில் அமைகிறதோ அந்த கூட்டணிக்கே வெற்றி என பேசியுள்ள பிரேமலதா விஜயகாந்த் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதையும் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

 

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “எங்களது உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் இரண்டாவது கட்டம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருச்சிக்கு வெகு விரைவில் வர இருக்கிறோம்

 

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தேமுதிக வரவேற்கிறது. அதிகாரத்தை பிரித்து அளிக்கும்போது நாட்டு மக்களுக்காக இன்னமும் சிறப்பாக பணியாற்ற முடியும். எடப்பாடி பழனிசாமியின் பயணமும், எங்கள் பயணமும் வேறுபட்டவை.

 

நடைபெற உள்ள சட்டமன்ற தேட்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். கூட்டணி தொடர்பாகவும், யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதையும் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K