விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் திடீர் சந்திப்பு.. 20 நிமிடங்கள் ரகசிய பேச்சுவார்த்தை..!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், சென்னை நீலாங்கரையில் தலைவர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த், நிர்மல் குமார் உட்பட பல நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதியழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரிய மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகின.
இந்த சூழலில், கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, தமிழக அரசின் விசாரணை ஆணையம் மற்றும் எஸ்ஐடி விசாரணையையும் நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் தான் புஸ்ஸி ஆனந்த், நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் அவரைச் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார். சந்திப்புக்கு பிறகு அவர் புதுச்சேரி நோக்கி புறப்பட்டு சென்றார்.
Edited by Mahendran