சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இன்று கூட தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று முதல் (அக்டோபர் 14) மழை தீவிரமடைய தொடங்கும் என்றும், அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, திருநெல்வேலி முதல் சென்னை வரையிலான கடற்கரைப் பகுதிகளில் இன்று முதல் நல்ல மழை பெய்யும் என்றும், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran