தவெகவுக்கு தாவும் அதிமுகவினர்!.. அப்செட்டில் தவெகவினர்!.. நடப்பது என்ன?!...
அரசியலில் இருப்பவர்கள் எப்போதும் ஒரு ஆதாயத்தை நம்பித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு தேவையான பதவி அந்த கட்சியில் கிடைக்கவில்லை என்றால் வேறு கட்சிக்கு சென்று விடுவார்கள். முக்கியமாக பதவி வேண்டும்.. பதவி இருந்தால்தான் அரசியலில் மதிப்பு கிடைக்கும்.
எனவே பதவி கிடைக்காத கட்சியிலிருந்து பலரும் விலகி பதவி கொடுக்கும் கட்சிக்கு சென்று விடுவார்கள். இது காலம் காலமாக நடக்கும் நடைமுறைதான். இதற்கு உதாரணமாக கடந்த காலங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கும், திமுகவிலிருந்து அதிமுகவுக்கும் பலரும் தாவியிருக்கிறார்கள். தற்போது அந்த இரண்டு கட்சிகளும் இல்லாமல் புதிதாக வந்த தவெக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது. அதிமுக 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது. எனவே, அந்த கட்சியிலிருந்து பலரும் தவெகவுக்கு தாவி வருகிறார்கள்..
ஏற்கனவே சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான 24 எம்எல்ஏக்கள் தவெகவை ஆதரித்து சட்டமன்றத்தில் வாக்களித்தார்கள். அதன்பின் அவர்களில் 4 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்கள். மேலும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் விரைவில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைவார்கள் எனவும் சொல்லப்படுகிறது..
அதேநேரம் இப்படி மற்ற கட்சியிலிருந்து பலரும் தவெகவுக்கு வருவது பல வருடங்களாக தவெகவில் இருக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளை கலக்கமடைய செய்திருக்கிறது. ஏனெனில் விஜய் மக்கள் இயக்கம் துவங்கிய காலத்திலிருந்து நிர்வாகிகளாக இருக்கும் நமக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புதிதாக வருபவர்களுக்கு தலைமை பதவிகளை கொடுத்து விட்டால் என்ன செய்வது என்ற கலக்கத்தில் அவர்கள் இருக்கிறார்களாம்.