1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran Came Out From Assembly

பேச அனுமதி மறுப்பு: டிடிவி தினகரன் வெளிநடப்பு!

டிடிவி தினகரன்
தமிழக சட்டசபையில் அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் அளிக்க தனக்கு சபாநாயகர் தனபால் அனுமதி வழங்காததால், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார்.
 
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று அமைச்சர் தங்கமணி பேசும் போது மெஜாரிட்டி அரசு என கூறினார். இதற்கு டிடிவி தினகரன் பதில் அளிக்க முயன்ற போது சபாநாயகர் அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
 
மேலும் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பேசுவதற்கும் தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திமுகவினர் அமரும் இடத்தில் தனக்கு இருக்கை ஒதுக்கிவிட்டு, தான் திமுகவினருடன் பேசுவதாக குற்றம் சாட்டுகின்றனர் என தினகரன் கூறினார்.
 
மேலும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது என தினகரன் தெரிவித்தார்.
ये भी पढ़ें
விலை குறைத்த ஜியோ: ப்ளானையே மாற்றிய ஏர்டெல்...