திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (18:01 IST)

மரத்தில் ஏறி தீக்குளிக்க முயன்ற வாலிபர்.! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

arrest
பட்டா வழங்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாலிபர் ஒருவர், மரத்தில் ஏறி தீக்குளிக்க  முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பூரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி.  இவருக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்க கோரி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தும் பட்டா வழங்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  முனுசாமி, அவருடைய மனைவி, மகன் ராகேஷ் வயது (21) உடன் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
 
sucide attempt
அப்போது இளைஞர் ராகேஷ், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தின் உச்சியில் ஏறி, தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய கேனை எடுத்து உடல் மீது ஊற்றிக் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.


அங்கிருந்த போலீசார் உடனடியாக மரத்தில் ஏறி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி, அவரை கீழே இறக்கி ஆம்புலன்ஸ் வரவைத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.