1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt temperorily stopped Sathunavu postings

இவ்ளோ பேரு அப்ளை பண்ணுனா என்ன பண்றது? – சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்தம்!

Tamilnadu
தமிழகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கான பணியிட தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தேர்வு நடைமுறைகளை நிறுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர், சமையலாளர், சமையல் உதவியாளர் ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதை தொடர்ந்து மாவட்டம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். சமீபத்தில் மதுரையில் விண்ணப்பங்களை சமர்பிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பதட்டம் நிலவியது.

தற்போது இந்த பணியிடங்களுக்கு பல்லாயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் பணியிட தேர்வுகளை நடத்தினால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசு கருதுகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் சத்துணவு பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஏவுகணை தளம் அமைக்கும் பாகிஸ்தான்; உதவும் சீனா! – இந்தியாவுக்கு எதிராக கூட்டு சதியா?