1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn assembly election compaign finish tomorrow

நாளையுடன் பிரச்சாரம் ஓவர்!.. சூடுபிடிக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம்!..

seeman
2026 சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கிறது. 234 தொகுதிகளுக்கும் மொத்தம் 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் வாக்களிக்கவிருக்கிறார்கள்.வழக்கம்போல் அதிகளவு வாக்குகள் பதிவாக வைக்க பல விழிப்புணர்ச்சிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது..

ஒருபக்கம் அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த பல நாட்களாகவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்...

இதில் மற்ற தலைவர்கள் ஒப்பிடும்போது அவர்கள் செய்த பிரச்சாரத்தில் பாதியை கூட தவெக தலைவர் விஜய் செய்யவில்லை. அதேநேரம் அடிப்படையில் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் தனக்கு அதிக அளவு வாக்குகள் விழும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.

ஏப்ரல் 21ஆம் தேதியான நாளையோடு பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.. அதேபோல் பழனிச்சாமி தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.. தவெக தலைவர் விஜய் நாளை சென்னை நந்தனம் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
About Writer
Mahendran
ये भी पढ़ें
விவாகரத்து வழக்கு!. விஜயை வீடியோ காலில் ஆஜராக நீதிமன்றத்தம் உத்தரவு!..