திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (16:36 IST)

திமுக வேட்பாளரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.-துரைமுருகன்

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுகிறது.
 
இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
 
தமிழ் நாட்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள  திமுக 21 தொகுதிகளிலும் மீதியுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகல் போட்டியிடுகின்றன.
 
இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் தேர்தல் வாக்குறுதிகளும் வெளியானது.
 
இந்த நிலையில் வேலூரில் இன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:
 
பிரதமர் மோடி நாங்கள் தியாகம் எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.  நாங்கள் தியாகத்தில் வளர்ந்தவர்கள் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளோம். நான் அப்படி சிறைக்குச் சென்றபோது என் மகன் என்  என் சட்டையைப் பிடித்து அழுதார். என் மகனை ஒரு வருடம் தொடாமல் நான் என் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன் என்றார்.

மேலும், திமுகவில் செல்வாக்குள்ள வேட்பாளர்     நிற்கிறார் என்பதால் அவரை கைது செய்ய மேலிடம் கூறியதாக தகவல் வெளியாகிறது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று கூறினார்.