திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (08:22 IST)

ரயில் இஞ்சினில் சிக்கி இருந்த நபர்..! அலறி ஓடிய பயணிகள்! – மதுரையில் அதிர்ச்சி!

Madurai
மதுரைக்கு வந்த பொதிகை ரயில் என்ஜின் முன் இறந்த நிலையில் சிக்கி இருந்த மனித உடலைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 
செங்கோட்டை - சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் இன்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. மதுரை ரயில் நிலையம் வந்தபோது என்ஜினின் முன் பகுதியில் மனித உடல் சிக்கி இருப்பதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த  ரயில்வே போலீசார் அங்கு விரைந்து என்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது மதுரை கப்பலூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் ரயிலில் தற்கொலை செய்ய முயன்ற போது என்ஜினின் முன் பகுதியில் உடல்  சிக்கி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பொதிகை ரெயிலானது 45 நிமிடங்களுக்கு மேலாக மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் புறப்பட்டு சென்றது.