1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac worker request to chief minister vijay

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

tasmac
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றவுடனேயே டாஸ்மாக் தொடர்பாக பல அதிரடியான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியானது. குறிப்பாக 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைக்கக் கூடாது, கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யக்கூடாது, மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது என்றெல்லாம் தமிழக அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

ஆனால் கடந்த பல வருடங்களாகவே அல்லது டாஸ்மாக் தோன்றியதில் இருந்தே கூட பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் என்பது வசூலிக்கப்பட்டு வருகிறது. அவை ஆளும் கட்சி தரப்புக்கு செல்வதாக ஒருபுறமும் கடை வாடகை, கரண்ட் பில் மற்றும் மற்ற செலவுகளுக்காக அந்த பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதாக ஒருபுறமும் சொல்லப்படுகிறது..

தற்போது கூடுதல் பணம் வாங்கக்கூடாது என சொல்லிவிட்டதால் தவெக நிர்வாகிகளும், மதுப்பிரியர்களும் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்து வருகிறார்கள்.
ஒருபக்கம் மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலிறுத்தி சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மேலும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடையில் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது..

அந்தப் போராட்டத்தில் பேசிய டாஸ்மாக் ஊழியர் ஒருவர் ‘டாஸ்மாக்கில் கொத்தடிமை போல நாங்கள் வேலை பார்க்கிறோம். இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் என வாங்கி வாழ்க்கையை ஓட்டி வந்தோம். இன்னைக்கு விஜய் சார் வந்து பத்து ரூபாய் வாங்க கூடாதுன்னு சொல்றாரு.. நாங்க இப்போ வாங்கல.. எங்க சம்பளம் 12 ஆயிரம்தான்.. அது வீட்டு, வாடகை, பெட்ரோலுக்கே சரியா இருக்கு.

மாற்றம் வரும் என நம்பி 75 சதவீத டாஸ்மாக் ஊழியர்கள் விஜய் சாருக்குதான் ஓட்டு போட்டேம்.. அதனால எங்களுக்கு ஏதாவது அவர் பண்ணனும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்
.
About Writer
பாலகிருஷ்ணன்