திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (10:17 IST)

TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை

TANCET
TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியின் கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில்  எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். மேலும்  எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற பொறியியல் படிப்புகளில் சேர CEETA  நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்
 
இந்த நிலையில் 2024- 2025 ஆம் கல்வியாண்டிற்கான TANCET, CEETA  நுழைவுத் தேர்வுகளுக்கான ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை வரும் 12 ஆத் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 
https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் எழுத உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran