திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2024 (13:58 IST)

மோடி தோற்கடிக்கப்பட வேண்டும், ஆனால் பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் செல்வேன்: சுப்ரமணியசாமி

subramaniya swamy
பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் நான் பிரச்சாரம் செய்வேன் என்றும் முன்னாள் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இதனை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் முன்னாள் பாஜக எம்பியான சுப்பிரமணியன் சாமி தற்போது பாஜகவில் இருந்தாலும் அவர் அவ்வப்போது பாஜகவுக்கு எதிரான கருத்தை கூறி வருகிறார் என்பதும் பிரதமர் மோடி உள்பட பலரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பாரதிய ஜனதா கட்சி என்னிடம் பிரச்சாரத்துக்கு வருமாறு கேட்டால் நான் பிரச்சாரத்திற்கு செல்வேன் என்றும் ஆனால் என்னிடம் இதுவரை யாரும் பிரச்சாரத்திற்கு வாருங்கள் என்று கேட்கவில்லை என்று கூறினார்

 மேலும் மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது என்றும் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva