திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (10:38 IST)

பாஸ் கொடுத்த பாஜக எம்பி உள்ளே.. காரணம் யாரென கேட்ட நாங்கள் வெளியேவா? சு வெங்கடேசன் எம்பி

பாராளுமன்றத்தை தாக்க வந்தவர்களுக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்பி உள்ளே இருக்கும்போது பாதுகாப்புக்கு காரணம் கேட்ட நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வெளியே போகவா என மதுரை பாராளுமன்ற தொகுதி எம்பி சு வெங்கடேசன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் பாராளுமன்றத்தில் இருவர் தாக்குதல் நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்  இது குறித்து கேள்வி எழுப்பிய 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது சமூக வலைதளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது
 
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! 
 
பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! 
 
அவையில் மட்டுமல்ல..
பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
 
ஆனால் பாஜக எம்பி  பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம்.
 
இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு.
 
Edited by Mahendran