1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 மே 2025 (10:09 IST)

சந்தியாவதனம் செய்யும்போது தவறி விழுந்த மாணவர்கள்! நீரில் மூழ்கி பரிதாப பலி!

drowning

திருவள்ளூரில் சந்தியாவதனம் செய்ய சென்ற மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலையூரை சேர்ந்த மடப்பள்ளியில் ஹரிஹரன், வெங்கடரமணன், வீரராகவன் என்ற இளைஞர்கள் பயின்று வந்துள்ளனர். சந்தியாவதனம் செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் இளைஞர்கள் இறங்கியுள்ளனர். 

 

அப்போது இவர்கள் 3 பேரும் படிக்கட்டு வழுக்கி குளத்தில் விழுந்துள்ளனர். அந்த பகுதி ஆழமானதாக இருந்ததால் நீச்சல் தெரியாத மூவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மீட்பு படையினர், போலீஸார் இளைஞர்கள் உடலை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளதுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K