1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (09:48 IST)

இருளில் மூழ்கிய ஸ்பெயின். பிரான்ஸ் நகரங்கள்! சைபர் தாக்குதல் காரணமா? - அதிர்ச்சி சம்பவம்!

Powercut In Spain

நேற்று ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளின் முக்கிய நகரங்களில் தானியங்கி மின்வசதிகள் திடீரென நின்று போனதால் மொத்த நகரங்களும் இருளில் மூழ்கியது.

 

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் நேற்று திடீரென மொத்தமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பாரிஸ், மாட்ரிட் என பல நகரங்களில் ஏற்பட்ட இந்த மின்வெட்டால் தானியங்கி சிக்னல்கள் முழுவதும் செயல்படாமல் நின்று போனதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுரங்க ரயில் பாதைகளில் மின்சாரம் நின்று போனதால் ரயிலில் சென்ற பயணிகள் பாதி வழியில் சிக்கிக் கொண்டதுடன், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளும் சுரங்க பாதையில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

 

முக்கிய நகரங்களில் மெட்ரோ சேவைகள் முழுவதும் மூடப்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகே பயணிகளை மீட்க முடிந்தது. பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் இருளில் மூழ்கியது மட்டுமல்லாமல் ஸ்பெயின் பாராளுமன்றமும் இருளில் மூழ்கியது.

 

சில மணி நேர போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் மின் இணைப்பு கிடைத்து நிலைமை சீரானது. ஆனால் மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த நாடுகளில் மின்பகிர்மானம் தானியங்கி முறையில் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் இது சைபர் தாக்குதலாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K