1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (07:33 IST)

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Rain
தமிழகத்தில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
குமரி கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் கடல் காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது என்றும், இதனால் இன்று முதல், அதாவது ஏப்ரல் 29 முதல் மே மூன்றாம் தேதி வரை, தமிழகத்தில் உள்ள சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொருத்தவரை, நேற்று லேசான மழை சில பகுதிகளில் பெய்த நிலையில், இன்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில், தமிழகத்தின் பிற பகுதிகளில் வெயில் கொளுத்தும் என்றும், நேற்று நான்கு இடங்களில், நான்கு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்ததாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏப்ரல் 29 முதல் மே இரண்டாம் தேதி வரை, தமிழகத்தில் உள்ள பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்றும், இயல்பான வெப்பநிலையில் இருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva