1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Setback for TVK as Nomination is Rejected in Edappadi Constituency

விஜய் நிற்கும் பெரம்பூரை பாமகவுக்கு தள்ளிவிட்ட ஈபிஎஸ்.. ஈபிஎஸ் நிற்கும் தொகுதியில் வேட்பாளரே போடாத விஜய்.. ஏதேனும் உள்குத்தா?

eps vijay
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் அதிரடியாக நிராகரித்துள்ளது. இதனால் எடப்பாடியில் தவெக  வேட்பாளரே இல்லை.
 
தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்புமனுவிற்கு குறைந்தது 10 முன்மொழிபவர்களின் கையொப்பம் தேவை. ஆனால், அருண்குமாரின் மனுவில் 8 கையொப்பங்கள் மட்டுமே இருந்தன. அவருக்குப் பதிலாக நிறுத்தப்பட்ட மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவிலும் 7 கையொப்பங்கள் மட்டுமே இருந்ததால், அதுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து இத்தொகுதியில் அக்கட்சியால் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
 
விஜய் போட்டியிடும் பெரம்பூரில், பாமக நிற்க வைத்து அதிமுக அவருக்கு மறைமுகமாக உதவி செய்ததாக கூறப்படும் நிலையில் அதற்கு பிரதிபலனாக எடப்பாடியில் தவெக வேட்பாளரே இல்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அலுவலகம் வந்து வேலை பார்த்தால் கூடுதல் சம்பளம், சலுகைகள்.. அறிவித்த மறுநாளே Work From Homeஐ கைவிட்ட ஊழியர்கள்..!