விஜய்க்கு துணை ராணுவ பாதுகாப்பு.. வீட்டுக்கு வந்த 5 துணை ராணுவ வீரர்கள்..
நேற்று கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு, விஜய் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், 5 துணை ராணுவ வீரர்கள் விஜய் வீட்டிற்கு சற்றுமுன் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கரூரில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்தில் FIR தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் குற்றவாளிகளாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் சிலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva