திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (08:03 IST)

கடும் வெயிலால் பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்.. கோடை விடுமுறை நீட்டிப்பு..!

School Student
புதுச்சேரியில்  ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது என்றும்,  கடும் வெயிலால் ஜூன் 12 வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

புதுவை போலவே தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஜூன் 6-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 6, 7 தேதிகளுக்கு பிறகு சனி ஞாயிறு விடுமுறை வருவதால் ஜூன் 10ஆம் தேதி திறக்கலாம் என்று பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருவதாகவும் பள்ளிகள் ஏற்கனவே ஒரு அறிவிக்கப்பட்ட தேதியில் திறக்கப்படுமா அல்லது பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க பார்க்க வேண்டும்.

ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva