1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2025 (11:32 IST)

உருண்டு வந்த குழாய்கள்.. நொறுங்கிய வாகனங்கள்! தஞ்சாவூரில் ஒரு Final Destination! - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

Thanjavur Accident

தஞ்சாவூரில் லாரியில் ஏற்றிச் சென்ற குடிநீர் குழாய்கள் சாலையில் விழுந்து ஹாலிவுட் பட பாணியில் ஏற்பட்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

90ஸ் கிட்ஸ் மத்தியிலேயே பிரபலமான ஹாலிவுட் படங்களில் ஒன்று Final Destination. அதில் மரத்துண்டுகளை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் கயிறு அறுந்து விழுந்து ஒரு பெரிய சாலை விபத்து ஏற்படுவது போல காட்சி இடம்பெற்றிருக்கும். அதை பார்த்த பலருக்கும் தற்போதும் கூட மர லாரிகளை கடந்து செல்லும்போது அந்த பயம் இருக்கும்.

 

இந்நிலையில் அந்த படத்தில் நடப்பது போன்ற ஒரு விபத்து சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது. நிலத்தில் பதிக்கும் கனரக குடிநீர் குழாய்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று தஞ்சை - திருவாரூர் சாலையில் சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து விழுந்ததில் குழாய்கள் சாலையில் விழுந்து உருண்டோடியதுடன், பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்களில் பலமாக மோதின.

 

இதில் பல வாகனங்கள் நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K