திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (13:51 IST)

போராட்டம் நடத்த போன இடத்தில் கலவரம்! – எடப்பாடியார் – ஓபிஎஸ் அணியினர் மோதல்!

ADMK
58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட ஒபிஎஸ் அணி - இபிஎஸ் அணியினர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தரமாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க வலியுறுத்தியும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் இணைந்து உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பனிமனையிலிருந்து தேவர் சிலை வரை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டன பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக இபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான நிர்வாகிகளும், ஒபிஎஸ் அணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஊர்வலமாக நடந்த போது., ஒபிஎஸ், இபிஎஸ் அணி நிர்வாகிகளிடையே யார் முதலில் செல்வது என ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்விடத்திற்கு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் மோதலில் ஈடுபட்டவர்களை விலகிவிட்டு தனித்தனியே ஊர்வலத்தில் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.