1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. red alert to chennai for two days

சென்னைக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்!

சென்னை
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சமீபத்தில் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு மிக பலத்த மழை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் இதன் காரணமாக சென்னைக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு இன்றும் நாளையும் மறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
நெல் பயிர் காப்பீடு: கடைசி நாள் அறிவிப்பு!