வெள்ளி, 21 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By WD
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2025 (11:22 IST)

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...
நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில் அவரின் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே அப்போது முன்னணி ஹீரோக்களாக இருந்த நடிகர்களுடன் இணைந்து தனது மகன் விஜய் நடித்தால் ரசிகர்களிடம் ரீச் ஆவார் என கணக்கு போட்ட அவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பல நடிகர்களிடமும் சென்று இதுபற்றி பேசினார். ஆனால் யாரும் பிடி கொடுக்கவில்லை.
 
தன்னை வைத்து சினிமாவில் பல படங்களை இயக்கியவர் என்பதால் அதற்கு சம்மதித்து செந்தூரப்பாண்டிப டத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். அதன்பின் விஜயின் சினிமா கிராப் மேலே போனது. ஆனால் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபோது ஒருமுறை கூட விஜய் நேரில் சென்று அவரை பார்க்கவில்லை. மேலும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவுக்கு நடிக்க வந்த போதும் அவரை தனது படங்களில் விஜய் நடிக்க வைக்கவில்லை. இதை விஜயகாந்த் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் கடுமையாக விமர்சித்தார்கள்.
 
விஜயகாந்த் மரணம் அடைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த விஜய் சென்றபோது அவர் மீது விஜயகாந்த் ரசிகர்கள் செருப்பு வீசிய சம்பவமெல்லாம் நடந்தது. விஜய் நடித்த கோட் படத்தின் முதல் காட்சியில் விஜயகாந்த் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
 
தற்போது விஜய் தீவிர அரசியலுக்கு வந்து விட்டார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறி வைத்திருக்கிறார். தொடர்ந்து திமுகவை விமர்சித்தும் வருகிறார். இந்நிலையில் தேமுதிக விழா ஒன்றில் பேசிய பிரேமலதா ‘யாரும் இங்கே எடுத்தவுடனேயே வந்து விட முடியாது. நேற்று முளைத்த காளான்லாம் இங்கே எடுபடாது. அது ஒரு நாள் மழைக்கே தாங்காது. தேமுதிக என்பது கேப்டன் உருவாக்கிய ஆள விருட்சம். உங்கள் எல்லோரையும் பார்க்க சின்ன கேப்டன் தொகுதி தொகுதியாக வருவார். 2017-ல் கேப்டன் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 2026-ல் என்ன நடக்கும்னு வேடிக்கை பாருங்க’ என தொண்டர்களை உற்சாகப்படுத்தும்படி பேசியிருக்கிறார்.
 
நேற்று முளைத்த காளான் என பிரேமலதா சொன்னது விஜயை மனதில் வைத்துதான் என பலரும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.