தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா? ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை
- ஒருத்தருக்கு இவ்ளோதான் சரக்கு விக்கணும்!. டாஸ்மாக்கில் கட்டுப்பாடு!...
- அரசு பேருந்து மோதி 4 பேர் பலி!.. சேலம் அருகே அதிர்ச்சி...
- கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து.. கரூர் அருகே பயங்கரம்.. உடனடியாக விரைந்த செந்தில் பாலாஜி..!
- கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: விறகு அடுப்புக்கு மாறும் ஓட்டல்கள்..!
மே 1ம் தேதி முதல் வெயில் கொளுத்தும்!.. பிரதீப் ஜான் எச்சரிக்கை..
பொதுவாக வெயில் காலம் தொடங்கி விட்டாலே வெயில் சுட்டெரிக்கும். ஏப்ரல், மே மாதங்கள் கோடைகாலமாக இருந்தாலும் தற்போது மாறிவரும் காலநிலை காரணமாக மார்ச் மாதம் முதலே வெயில் கொளுத்த துவங்கி விடுகிறது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டதால் வெயில் வழக்கம் போல் கொளுத்தி வருகிறது. வருகிற மே 4ம் தேதி தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. அதன்பின் சில வாரங்கள் மிகவும் அதிகமான வெயில் தாக்கம் இருக்கும்..
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ள கருத்தில் மே 1ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கடுமையான வெயில் கொளுத்தும். உள் தமிழகம், தென் மற்றும் மேற்கு தமிழகத்தில் மே 1 அல்லது இரண்டாம் தேதி மழை மீண்டும் தொடங்கும்.
ஆந்திர எல்லைக்கு அருகில் உள்ள சென்னை மற்றும் சுற்றிய மாவட்டங்களில் கடும் வெயில் தாக்கம் இருக்கும். மே 1 அல்லது 2ம் தேதி முதல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் என அவர் கூறியிருக்கிறார்.